மான் வேட்டையில் ஈடுபட்ட2 பேர் கைது – 3 பேர் தப்பி ஓட்டம்

மடிகேரி : நவம்பர். 11 – மானை வேட்டையாடிய விவகாரம் தொடர்பாக இரண்டு குற்றவாளிகளை வனத்துறை கைது செய்திருப்பதுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் மூன்று பேரை கைது செய்ய தீவிரமாக தேடி வருகின்றனர். பொன்னம்பெட் வனத்துறை பகுதி அதிகாரிகள் மற்றும் நாகரஹொலேவின் கல்லல்லா வன விலங்கு காப்பக அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். பொன்னப்பேட்டையின் நிட்டூரு கிராமத்தை சேர்ந்த பி சி ஜீவன் மற்றும் வி ஜி லிங்கராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள். இதே கிராமத்தை சேர்ந்த ஷரத் , சேத்தன் மற்றும் ஸ்வாமி ஆகிய மூவர் தப்பியோடியுள்ளனர் . இவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குற்றவாளி ஷரத் மற்ற குற்றவாளிகளிடம் இனைந்து நாகரஹோலே பகுதியில் உள்ள கல்லல்லா வனப்பகுதிக்கு தன்னுடைய உரிமை பெற்ற துப்பாக்கிகளுடன் சட்டவிரோதமாக நுழைந்துள்ளான். இவர்கள் காட்டு மானை வேட்டையாடி கொன்று அதற்றை வெளியே கொண்டு வந்துள்ளனர். பின்னர் அதன் மாமிசத்தை தங்களுக்குள் பங்கு போட்டு கொண்டனர். மானின் கொம்புகளை குற்றவாளிகளில் ஒருவன் எடுத்து சென்றுள்ளான். இந்த சம்பவம் குறித்து நம்பகமான தகவல் கிடைத்து நடவடிக்கை மேற்கொண்ட பொன்னம்பெட் மற்றும் கல்லாலா வனத்துறை அதிகாரிகள் மாமிசம் பரிமாறிக்கொண்ட இடத்தில் சோதனைகள் நடத்தி ஜீவன் மற்றும் லிங்கராஜ் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மற்ற மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளனர். மான் கறி , மான் கொம்பு மற்றும் குற்றத்திற்கு பயன் படுத்திய ஆயுதங்களை வனத்துறையினர் வசப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு எதிராக வன விலங்குகள் காப்பக சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவாகியுள்ளது. பொன்னம்பெட் வனத்துறை கால்நடை மருத்துவர் முனைவர் சங்கேத் வச படுத்தியுள்ள மான் மாமிசத்தை சோதனை செய்திருப்பதுடன் மேலும் ஆய்வுக்கு பரிசோதனைக்கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.