மாமனார் பலாத்காரம் செய்ததாகபெண் போலீசில் புகார்

மும்பை, செப். 25 மும்பையில் காட்கோபர் கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் கூறி இருந்ததாவது:- “நான் 2 வாரங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது எனது மாமனார் அறைக்குள் நுழைந்து என்னை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் எனது மாமியார், மாமனார் மற்றும் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் என்னை துன்புறுத்தி வருகின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் படி போலீசார் பெண்ணின் மாமனார் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை துன்புறுத்திய 4 குடும்ப உறுப்பினர்கள் மீதும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இருப்பினும் வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.