மாமியார் வீட்டில் திருடிய மருமகன்

பெங்களுர் : நவம்பர். 21 – ஒன்றரை வருடங்களாக காதலித்து வீட்டின் பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடியது மட்டுமல்லாமல் மாமியார் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருள்களையும் திருடிச்சென்ற பலே மருமகனை அல்சூர் போலீசார் கைது செய்துள்ளனர். பிரதீப் குமார் என்பவன் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி . மாமியார் ரெஜினா கன்யாகுமாரிக்கு சென்றிருந்த நேரத்தில் திட்டம் தீட்டி குற்றவாளி வீட்டிலிருந்து விலையுயர்ந்த பொருள்களை திருடி சென்ற நேரத்தில் அக்கம் பக்கத்தவர் விசாரித்தபோது நான் இந்த வீட்டின் உறவினன் என தெரிவித்துள்ளான் . ஆனாலும் இவன் பொருள்களை திருடி செல்வதை மக்கள் மொபைல் போட்டோ எடுத்து ரஜினாவுக்கு அழைப்பு விடுத்து தகவல் தெரிவிக்க முயற்சித்துள்ளனர் .

ஆனால் ரஜினாவின் தொடர்பு இவர்களுக்கு கிடைக்க வில்லை. பின்னர் ரஜீனா கன்யாகுமாரியிலிருந்து வீட்டுக்கு திரும்பியபோது வீடு திறந்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தங்க நகைகள் பொருள்கள் உட்பட 40 லட்ச ருபாய் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது . . பின்னர் அக்கம் பக்கத்தார் வந்து ரஜினாவிடம் தாங்கள் திருடனை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அவர்கள் காட்டிய படத்தை பார்த்தபோது தன்னுடைய மருமகனே திருட்டை நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. ரெஜினாவின் கடைசி மகள் லாவண்யாவை காதலித்து அழைத்து சென்றுள்ளான் . ஆனால் இப்போது மகள் எங்குள்ளாள் என்பதும் தாய் ரெஜினாவுக்கு தெரியவில்லை . இந்த சம்பவம் குறித்து தன் மருமகனுக்கு எதிராகவே ரெஜினா அல்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ள நிலையில் போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .