மாரடோனா நினைவு தினம் மணல் சிற்பம் வரைந்து அஞ்சலி

புவனேஸ்வர், நவ. 25 –
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் டிகோ மாரடோனா. உலகம் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவு செய்தி கால்பந்து ரசிகர்களை கண்ணீரில் நனைத்தது. இதற்கிடையே, கால்பந்து வீரர் மாரடோனாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மாரடோனாவை நினைவு கூரும் வகையில், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் அவரது உருவத்தை மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளார். சுதர்சன் பட்நாயக். அதில் மாரடோனாவுக்கு அஞ்சலி என்ற வார்த்தையையும் வடித்துள்ளார்.