மார்ச் மாத சம்பளத்தை நிறுத்த அரசு முடிவு


பெங்களூர், ஏப். 7- கர்நாடக அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஆறாவது சம்பளக் கமிஷன் சிபாரிசை அமல்படுத்தக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் மார்ச் மாத சம்பளத்தை வழங்காமல் தடுக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பஸ் போக்குவரத்து கழகத்தை வேலைநிறுத்தத்தை தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தைத் துவக்கினார்கள். ஆனால் இவர்களுக்கு மார்ச் மாத சம்பளத்தை மாநில அரசு வழங்குவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. தொழிலாளர்கள் மார்ச் மாத சம்பளம் வழங்காமல் மாநில அரசு தடுக்க 4 போக்குவரத்து கழகங்களுக்கும் தகவல் அனுப்பி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.