
பெங்களூர், பிப். 23-
பெங்களூர் ஒயிட்ஃபீல்ட் – கே. ஆர். புரம் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.
இது இன்னும் 15 – 20 நாட்களில் முடிவடையும். மார்ச் இரண்டாவது வாரம் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்படலாம் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஐ. டி., நிறுவனங்களின் தொழிலாளர்கள், மற்றும் பெங்களூர் கிழக்குப் பகுதியில் வசித்து வருபவர்களுக்கு, பெரும் போக்குவரத்து பாதிப்பாக இருந்து வருகிறது.
ஒயிட் பீல்டு – கே .ஆர். புரம் மார்க்கம் மெட்ரோ ரயில் எப்போது இயங்கும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கான பாதுகாப்பு ஆய்வு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பர்வேஸ் கூறுகையில், மெட்ரோ ரயில் பாதுகாப்பு பணிகள் மும்முரமாகவும், நன்றாகவும் நடந்து வருகிறது.
வெள்ளிக் கிழமை வரை பாதுகாப்பு சோதனைப் பணிகள் நடக்கும். இதன் அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் நான்கைந்து நாட்கள் தேவைப்படலாம்.
மெட்ரோ ரயில் பாதை, மெட்ரோ ரயில் நிலைய ்குறைபாடுகள் கண்டறியப்படும். அதனை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லா பணிகளும் 15 – 20 நாட்களில் முடிக்கப்படும்.
மார்ச் 15 முதல் மெட்ரோ ரயில் இயக்க படலாம் என்று அஞ்சும் பர்வேஸ் தெரிவித்தார்.
இந்த மார்க்கத்தை கெங்கேரி, பையப்பன ஹள்ளி வரை நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
பி.எம்.ஆர்.சி.எல்., ஒயிட் பீல்டு – கே.ஆர். புரத்துக்கு 13 ரயில்களை இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் கே.ஆர்.புரம், பையப்பன ஹள்ளி இணைப்பு பணிகள் இயங்கும்.