மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிப்பதில் பிரச்னை

பெங்களூரு, ஜன‌. 5: மாற்றுத்திறனாளிகள் பஸ் பாஸ் புதுப்பிப்பதில் பிரச்னை ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள‌னர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான வருடாந்திர பஸ் பாஸ் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்ட போதிலும்,பெங்களூரில் சில பஸ் பயணிகள் பயணம் செய்ய சமீபத்தில் காலாவதியான பஸ் பாஸைக் காட்டியபோது நடத்துனர்களிடம் கேள்விகளை எதிர்கொண்டதாகக் தெரிவித்த‌னர்.கே.எஸ்.ஆர்.டி.சி வழங்கும் வருடாந்திர ஊனமுற்றோர் பாஸ்கள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் வரை செல்லுபடியாகும் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரை புதுப்பிக்கப்படும். புதுப்பித்தல் காலத்தில், கே.எஸ்.ஆர்.டி.சி வழங்கிய சுற்றறிக்கையில், பயனாளிகள் வைத்திருக்கும் காலாவதியான பாஸ்களை பிப்ரவரி இறுதி வரை செல்லுபடியாகும் எனக் கருதுமாறு நடத்துனர்களுக்கு அறிவுறுத்தியது.
அதற்குள், அவர்கள் புத்தாண்டுக்கான பாஸ்களை புதுப்பிக்க வேண்டும். இருப்பினும், மாற்றுத்திறனாளிகளின் பாஸின் செல்லுபடியாகும் தன்மை ஜனவரி முதல் டிசம்பர் வரை அச்சிடப்பட்டுள்ளது.
இந்த சலுகைக் காலத்தைப் பற்றி அறியாத சில நடத்துனர்கள், தங்களுடைய பாஸ்கள் செல்லாதவை எனக் கூறி, பேருந்துகளில் இருந்து பணம் செலுத்தவோ அல்லது இறங்கவோ கோருவதாக தெரிவித்தனர்.
செவித்திறன் குறைபாடுள்ள மல்லேஸ்வரத்தில் வசிக்கும் பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் ஒருவர், திங்கள்கிழமை யஷ்வந்த்பூரில் உள்ள தனது பணியிடத்திற்கு சென்ற பேருந்துகளில் ஒன்றில் அவ்வாறே செய்ததாகக் கூறினார். ஜனவரி முதல் பிப்ரவரி இறுதி வரை புதுப்பித்தல் காலம் இருக்கும்போது, பாஸ் காலாவதியாகும் முன்பே ஒருவர் எவ்வாறு புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றார்.ஆனேக்கல் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் கடந்த காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொண்டார். என்னிடம் பணம் செலுத்துமாறு அல்லது பேருந்தை விட்டுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். ஆனால் அதைச் செய்ய மறுத்து நான் உறுதியாக நின்றேன். அதுதான் ஒரே தீர்வு என்றார்.
நடத்துனர்களின் இந்த விழிப்புணர்வு குறைபாடு சர்வர் பிரச்சனைகளுடன் இணைந்துள்ளது. “சேவா சிந்து சர்வர் பல நாட்களாக செயலிழந்துள்ளது. புதுப்பித்தலுக்கு உதவுவதற்காக மல்லேஸ்வரம் மற்றும் ராஜாஜிநகர் சென்றேன். ஆனால் இணையதளம் வேலை செய்யவில்லை என்று பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்தார்.