மாலத்தீவு விரையும் சீன ஆராய்ச்சி கப்பல் இந்தியாவுக்கு ஆபத்து?

பெய்ஜிங்: ஜனவரி 23. இலங்கையில் நீடிக்கும் தடையால் சீன ஆராய்ச்சி கப்பலான ஜியாங் யாங் ஹாங் 03 இந்தியாவிடம் மோதி வரும் மாலத்தீவு நோக்கி அது செல்கிறது. தற்போது சீனா-மாலத்தீவு இடையேயான உறவு என்பது மேம்பட்டு இருக்கும் சூழலில் இந்த கப்பலின் பயணம் என்பது இந்தியாவுக்கு ஆபத்தை தருகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக இலங்கை, சீனா, மாலத்தீவு உள்ளிட்டவை உள்ளன. தற்போதைய சூழலில் நிதி நெருக்கடியால் சிரமப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவி செய்தது. இதனால் இலங்கை இப்போது இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளது. மாறாக சீனா வழக்கம் போல் இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது.
அதேபோல் மாலத்தீவுக்கு இந்தியாவுக்கு பல உதவிகளை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அங்கு நடந்த அதிபர் தேர்தலில் சீனா ஆதரவாளரும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்ட முகமது முய்சு வெற்றி பெற்றாார். இதையடுத்து லட்சத்தீவு சென்று பிரதமர் மோடி எக்ஸ் போட்டோவில் வெளியிட்ட போட்டோ, வீடியோ பெரிய அளவில் விவாதத்தை கிளம்பியது.
இந்த விவகாரத்தில் மாலத்தீவு-இந்தியா இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டது. மாலத்தீவில் உள்ள இந்திய வீரர்களை வெளியேறும்படி அந்தாடு தெரிவித்துள்ளது. இதனால் தற்போதைய சூழலில் இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவு சுமூகமானதாக இல்லை. இத்தகைய சூழலில் தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனா இந்தியாவுடன் எல்லைப்பகுதியில் அடிக்கடி மோதி வருகிறது. அதேபோல் கடல் வழியாகவும் இந்தியாவை உளவு பார்க்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கிடையே தான் சீன ஆராய்ச்சி கப்பலான ஜியாங் யாங் ஹாங் 03- எனும் கப்பல் இந்திய பெருங்கடலில் கடல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள புறப்பட்டுள்ளது. இந்த கப்பல் இந்திய பெருங்கடலில் நுழைவது என்பது இந்தியாவுக்கு ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் இந்த கப்பலில் பல்வேறு தரவுகளை சேகரிப்பதற்கான நவீன கருவிகள் உள்ளன. இந்த கப்பலால் ஸ்னூப்பிங் செய்ய முடியும். இதுதான் பிரச்சனையாக உள்ளது. இதுபற்றி ஓபன் சோர்ஸ் இன்டலிஜென்ட் எனும் கடல்சார் கண்காணிப்பு அமைப்பானது தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛சீனாவின் ஜியாங் யாங் ஹாங் 03 எனும் கப்பல் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் நுழைகிறது. இது மாலத்தீவின் மாலே நோக்கி செல்கிறது. இந்த இந்திய பெருங்கடலில் கடல் ஆராய்ச்சியில் அது ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.