மாலில் இளம் பெண்ணிடம் ஆபாசம் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு வலைவீச்சு

பெங்களூர் : நவம்பர் . 1 – பிரசித்தி பெற்ற நகரின் லூலூ மாலில் இளம்பெனிடம் தவறாக நடந்து கொண்ட நபரை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவனை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். லூலூ மாலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இளம் பெண் ஒருவரை பின்பக்கமிருந்து உரசியிருப்பதுடன் அவரின் பின் பகுதியை தொட்டு அழுத்தியுள்ள காட்சிகள் வைரலாகியிருந்தது . இப்போது இந்த குற்றவாளி பசவேஸ்வரநகரை சேர்ந்த அஸ்வத்நாராயண் (60) என அடையாளம் தெரியவந்துள்ளது. ஆனால் இப்போது அஸ்வத்நாராயண் தன் வீட்டிற்கு பூட்டு போட்டு விட்டு தலைமறைவாயுள்ளான். இவன் நகரில் மிக பிரசித்தி பெற்ற ஆசிரம பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியற்றிவருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்போது இவன் அங்கிருந்து ஓய்வு பெற்றுள்ளான். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற இந்த முதுமை காமுகன் தன் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாயிருக்கும் நிலையில் மாகடி போலீசார் இப்போது இவனை தீவிரமாக தேடி வருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன்னர் லூலூ மாலில் இளம் பெண்ணை பின்புறத்தில் இருந்து உரசியதுடன் அவளுடைய பின்பகுதியை கசக்கியும் உள்ளன. இந்த காட்சியை யஸ்வந்த் என்பவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவ விட்டார்.இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு இப்போதுகுற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். ஆனால் வீடியோ வைரலாக உடனேயே குற்றவாளி வீட்டை பூட்டிக்கொண்டு தலைமறைவாயுள்ளான்.