மால்புவா என்ற புதியவகை இனிப்பு பண்டம்


தேவையான பொருட்கள்:
மைதா மாவு – ஒரு கப்
பால் பவுடர் – அரை கப்
ரவை – இரண்டு ஸ்பூன்
சோம்பு பொடி – அரை ஸ்பூன்
பால் – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
ஏலக்காய் பொடி – அரை ஸ்பூன்
எண்ணெய் , உலர் பழங்கள் – சிறிதளவு
செய்யும் முறை : ஒரு பவுலில் மைதா மாவு பால் பொடி சோம்பு பொடி , ரவை மற்றும் பாலை மேலே சொல்லியுள்ள அளவிற்கு சேர்த்து நன்றாக அது கட்டியாகாத விதத்தில் கலக்கவும். இந்த மாவு , தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். தேவையெனில் இன்னும் சற்று பாலை சேர்த்து கொள்ளலாம். இப்படி தயாரித்த மாவை அரை மணி நேரம் அப்படியே விட்டு விடவும். இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை மற்றும் அரை கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். சர்க்கரை முழுதுமாக கரைந்த பின்னர் ஐந்து நிமிடங்கள் நன்றக கொதிக்க வைத்து ஏலக்காய் பொடியை தூவி அடுப்பை அணைத்து விடவும். சர்க்கரை பாகை மூடி வைக்கவும். இப்போது ஒரு தவாவில் அரை அளவு எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்த பின்னர் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள மாவை மீண்டும் ஒரு முறை கலந்து கொண்டு ஒரு கரண்டி அளவிற்கு மாவை அதில் போடவும். ஒரு நிமிடம் சிறிய தீயில் வேக வைத்த பின்னர் அதை திருப்பி போட்டு னகிஅன்றாக வேக வைத்து எடுக்கவும். பின்னர் அதை ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள சர்க்கரை பாகில் நன்றாக அழுத்தி எடுத்து அவற்றின் மீது உலர்ந்த பழ துண்டுகளை தூவினால் ருசியான மால்புவா என்ற இதுவரை நாம் கேட்டிராத சுவைத்திராத பார்த்திராத புதுமையான இனிப்பு பண்டம் சுவைப்பதற்கு தயார்.