மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

சிக்கமஃலூர் : நவம்பர். 27 – மின்சார கம்பியில் அலுமினியம் ஏணி உரசியதில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் இறந்துள்ள சம்பவம் கடூர் தாலூகாவின் பட்டனகெரே என்ற இடத்தில் நடந்துள்ளது . இந்த கியாமத்தை சேர்ந்த அபிஷேக் (27) என்பவன் இந்த விபத்தில் உயிரிழந்தவன் . மூன்று ஏக்கர் பாக்கு தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களில் நேற்று தேங்காய் பறித்துக்ண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. தோட்டத்தில் ஒரு மரத்திலிருந்து அடுத்த மரத்திற்கு செல்லும்போது எடுத்து சென்ற அலுமினியம் ஏணி 10 ஆயிரம் கிலோ வாட் மின்கம்பியில் உரசியுள்ளது . இதனால் மின்சாரம் தாக்கியதில் அபிஷேக் தோட்டத்திலேயே விழுந்துள்ளன . உடனே அவனை கடூர் தாலூகா மருத்துவமனைக்கு எடுத்து சென்றும் சிகிச்சை அளவின்றி இறந்துளான் . இந்த சம்பவம் குறித்து கடூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது