மின்சார பஸ்களுக்கு தனி டிப்போ

பெங்களூர் ஜூன் 17-
மின்சார பஸ்களுக்கு தனி டிப்போ கட்டுவதற்கு குறித்து பி எம் டி சி நிறுவனம் ஆலோசித்து வருகிறது. மின்சார பஸ்கள் எண்ணிக்கை அதிகரித்த வாறு உள்ளது. தற்போது பெங்களூரில் 80 மின்சார பஸ்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாண்டு இறுதிக்குள் 300க்கும் மேற்பட்ட மின்சார பஸ்கள் வர உள்ளது. எனவே மின்சார பஸ்களுக்கு என தனி டிப்போ ஏற்படுத்த பி. எம். டி சி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.இதற்காக பிடதி, அத்திப்பள்ளி ஆகிய இடங்களில் வீடுகள் அமைக்கப்பட உள்ளது. இங்கு பஸ்களை நிர்வகிப்பு, சார்ஜிங் வசதி, பணியாளர் தங்கும் இடம் என அனைத்து வசதிகளும் இங்கு இருக்கும். இதுதொடர்பாக பி.எம்.டி.சி., அதிகாரி கூறுகையில், தற்போது டீசல் பஸ்சுக்களுடன் மின்சார பஸ்களை நிறுத்துவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது.
பஸ்களை அவ்வப்போது சார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. மின்சார பஸகளை அந்தந்த நிறுவனங்களே நிர்வகிக்கின்றனர். ஓட்டுநர்களை நிறுவனத்தினரே நியமித்துள்ளனர். இதை மனதில் கொண்டு தனிப்பட்ட முடிவு செய்துள்ளோம். ஆங்காங்கே சார்ஜிங் மையங்களும் அமைக்கப் படுகிறது என்றார்.