மின் கட்டண உயர்வால் தொழிற்சாலைகள் பாதிப்பு

பெங்களூரு : ஜூன் 10 கொரோனா சங்கடங்களால் இரும்பு , உருக்கு மற்றும் எண்ணெய்களின் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ள மாநிலஅரசின் நடவடிக்கையை கர்நாடக வர்த்தக மற்றும் தொழிற்சங்கங்கள் பிரிவு ( எப் கே சி சி ஐ ) கடுமையாக எதிர்த்துள்ளது. மின் கட்டண உயர்வு அனைத்து பிரிவு மக்களையும் பாதிப்பதுடன் மாநிலத்தின் பொருளாதாரத்தின் மீதும் பெரும் பாதிப்பை உருவாக்கும். இதன் விளைவாக கைத்தொழில் நிறுவனங்களின் அனைத்து பொருட்களின் விலை ஏற்றத்திற்கும் இதுவே காரணமாகிவிடும். என இந்த சங்க தலைவர் பெரிகள் எம் சுந்தர் தெரிவித்துள்ளார். கொரோனா சங்கட நிலையில் அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்கு மின் கட்டண உயர்வை நிறுத்திவைத்து தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கும் மாநில பொருளாதார முன்னேற்றத்திற்கும் கை கோர்க்கவேண்டும் என கோரிக்கை விடுதிருக்கும் போதிலும் மின்சார கட்டணம் உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என சுந்தர் தெரிவித்துள்ளார்.