மின் கம்பியில் சிக்கி2 பேர் பலி

பாலக்காடு (கேரளா) செப்டம்பர். 28 – காட்டு பன்றிகளை பிடிக்க போட்டிருந்த மின் வேலியில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பாலக்காட்டில் நடந்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த சதீஷ் (22) மற்றும் கொட்டிக்காடை சேர்ந்த ஷிஜித் (22) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள்.என பாலக்காடு எஸ் பி ஆர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இறந்துபோன சதீஷ் மற்றும் ஷிஜித் ஆகியோரின் உறவினர்கள் இரண்டு பெரும் காணாமல் போயுள்ளதாக போலீசில் வழக்கு பதிவு செய்திருந்தனர். பின்னனர் போலீசார் இவர்களை தேடி உள்ளனர். பின்னர் கரும்பு தோட்டத்திற்குள் மண் தோண்டியுள்ளது தெரியவந்துள்ளது . அங்கு பிணங்கள் புதைக்கப்பட்டுள்ள சந்தேகம் போலிஸாருக்கு எழுந்துள்ளது.பின்னர் போலீசார் ஆர் டி ஓ , தடவியல் நிபுணர்கள் மற்றும் விஞ்ஞான நிபுணர்களின் முன்னிலையில் இரண்டு உடல்களையியும் வெளியே எடுத்துள்ளோம் . மற்றும் இவர்கள் இருவரும் சதீஷ் மற்றும் ஷிஜித் என அவர்களின் குடும்பங்கலாள் அடையாளம் காணப்பட்டுள்ளது.இந்த வழக்கு குறித்த முதல் கடா விசாரணையின் போது இவர்கள் இருவரும் மின்சாரவேலியில் சிக்கி இருந்துள்ளதாக தெரியவருகின்றது. பின்னர் இந்த மின்சார வேலியை அமைத்தவர் தான் காட்டு பன்றிகளை பிடிக்க இந்த வேலியை அமைந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.