மின் கம்பி மிதித்து தாய் மகள் சாவு- கைது செய்யப்பட்ட பெஸ்காம் அதிகாரிகளுக்கு ஜாமீன்

பெங்களூர் : நவம்பர் . 20 – நகரின் வொயிட் பீல்டு காடுகோடி பகுதியில் துண்டாகி விழுந்திருந்த மின்சார கம்பியை மிதித்ததில் நேற்று ஒரு கர்ப்பிணி மற்றும் அவருடைய 9 மாத குழந்தை இறந்ததது தொடர்பாக கைது செய்யப்பட்ட பெஸ்காம் அதிகாரிகள் தற்போது ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். பணி அலட்சியம் காரணமாக பெஸ்காம் செயல் நிர்வாக பொறியாளர் (ஏ இ ) சேத்தன் , இளம் பொறியாளர் ராஜன்னா , மற்றும் நிலைய கண்காளிப்பாளர் மஞ்சு உட்பட ஐந்து பேரை காடுகோடி போலீசார் கைது செய்திருந்த நிலையில் பின்னர் இவர்கள் ஐவரும் போலீஸ் நிலைய ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். காடுகோடியின் ஏ கே கோபால் காலனியில் வசித்து வந்த சந்தோஷ் என்பவர் தன் மனைவியுடன் சென்னைக்கு சென்று நேற்று அதிகாலை 5 மணியளவில் நகரின் சில்க் போர்ட் அருகில் பஸ் இறங்கி பி எம் டி சி பஸ் ஏறி ஹோப் பாரம் வரை பயணித்து பின்னர் அங்கிருந்து தன் ஒன்பது மாத குழந்தையை சுமந்தபடி நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். கணவன் சந்தோஷ் நடைபாதையிலிருந்து கீழே இவர்களுடன் வந்து கொண்டிருந்தார். ஆனால் நடைபாதையில் மின்சார கம்பி துண்டாகி விழுந்திருந்தது. அதிகாலை நேரம் என்பதால் வெளிச்சம் தெரியாமல் சௌந்தர்யா மின்சார கம்பியை மிதித்துள்ளார். இந்த நிலையில் மின்சாரம் தாக்கியதில் சௌந்தர்யா மற்றும் அவளுடைய 9 மாத குழந்தை இருவரும் அங்கேயே கருகி இறந்துள்ளனர். அருகில் வந்து கொண்டிருந்த கணவன் சந்தோஷுக்கும் மின்சாரம் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு மணி நேரம் ஆகியும் அந்த இடத்திற்கு எந்த பெஸ்காம் அதிகாரிகளும் வரவில்லை. இதனால் பொதுமக்கள் பெஸ்காம் அதிகாரிகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் அலட்சியம் காட்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டு மற்றும் தவிர இறந்த குடும்பத்தாருக்கு பெஸ்காம் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளனர் . இதே போல் கடந்த ஆண்டு ட்ரான்ஸபார்மர் ஒன்று திடீரென தீ பற்றி எறிந்ததில் இளம்பெண் ஒருவர் தீயில் கருகி இறந்தார். இந்த சம்பவம் பெஸ்காம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் அலட்சியத்திற்கு காரணமாயிருந்த நிலையில் நேற்று இதே போல் ஒரு கர்ப்பிணி மற்றும் அவருடைய 9 மாத குழந்தை பெஸ்காம் அதிகாரிகள் மற்றும் ஊழியரின் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளனர்.