மும்பை, ஆக. 14: மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அண்மையில் அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசிய ஆசாமி, மும்பை நகரில் 100 கிலோ வெடிகுண்டு் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்து விட்டார். இதன்பேரில் போலீசார் முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தினர். இதில் அந்த ஆசாமி கடந்த 5 மாதமாக மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு 79 தடவை அழைப்பு விடுத்து உள்ளதும், மனநலம் சரி இல்லாதவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர், மால்வானி பகுதியை சேர்ந்த அகமது(வயது43) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீார் அவரை கைது செய்தனர். மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.