மீண்டும் கைது செய்ய முடிவு

சென்னை:நவ. 18- சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் என்ஐஏ எனப்படும் மத்திய புலனாய்வு முகமை விசாரணை தொடங்கி உள்ளது. அவரை கைது செய்து வேறு மாநிலத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் ஆலோசித்துவருகின்றனர்.
இந்நிலையில், சென்னை போலீஸாரும் கருக்கா வினோத் மீதான பிடியை இறுக்கி உள்ளனர். அவர் மீது 14 குற்ற வழக்குகள் உள்ளன. தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, அந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். இதனால், சிறையில் உள்ள கருக்கா வினோத் மீதான பிடி இறுகி உள்ளது.