மீண்டும் கொரோனா கட்டுப்பாடு

பெங்களூர்: ஜூன்6 –
மாநிலத்தில் கொரோனா புகார்கள் அதிகரித்துவரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு மீண்டும் சில கடுமையான முடிவுகளை நடைமுறைப்படுத்த முன் வந்துள்ளது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொற்றின் நிலைமை குறித்து அறிக்கைகள் தருமாறு முதல்வர் பசவராஜ் பொம்மை சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதுடன் அந்த அறிக்கைகளை வைத்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளார்.
இது குறித்து நகரில் இன்று செய்தியாளர்களிடம் முதல்வர் பசவராஜ் தெரிவிக்கையில் மாநிலத்தில் தொற்று அதிகரித்துவருவது தன்னுடைய கவனத்தில் இருப்பதாகவும் அனைத்து மாவட்டங்களின் கொரோனா நிலைமைகள் குறித்து அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட சுகாதார அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் பெற்று முழு அறிக்கை தருமாறு சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு தெரிவித்திருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் அந்த அறிக்கை வந்த பின்னர் ஓரிரண்டு நாட்களில் தொற்றை கட்டுப்படுத்த சில முடிவுகளை மேற்கொள்ளுவதாகவும் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் யாரும் ஆதங்க பட தேவையில்லை.தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். இதற்கு மேலும் சில முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். மாநிலத்தில் கொரோனா தொற்று இறங்கு முகமாக இருந்தது. ஆனால் சில நாட்களாக நிதானமாக தொற்று புகார்கள் அதிகரித்து வருகிறது.
எந்தெந்த மாவட்டங்களில் தொற்று ஏறு முகமாயுள்ளது என்பதை அறிய ஒவ்வொரு மாவட்டத்தின் தொற்று நிலைமை குறித்து அறிக்கை கேட்டுள்ளேன் . இந்த அறிக்கைகள் வந்த பின்னர் தொற்றை கட்டுப்படுத்த முடிவுகளை அரசு மேற்கொள்ளும் என்றார்.
கொரோனா தொற்றால் இறந்துபோன அனைவருக்கும் நிவாரண தொகை அளிக்கப்பட்டு வருகிறது. நிவாரண தொகை கிடைக்காத சில விசேஷ புகார்கள் இருந்தால் அவற்றை தீவிரமாக கருதி அத்தகையவர்களுக்கும் நிச்சயம் நிவாரணம் கிடைக்க செய்யும் நம்பிக்கையை முதல்வர் அளித்துள்ளார். தொற்று அதிகரிப்பதற்கு எவ்வித ஆதங்கமும் தேவை இல்லை. அது கட்டுப்படுத்தப்படும் . என்றும் முதல்வர் நம்பிக்கை அளித்துள்ளார். ராய்ச்சூரில் கலப்பட குடிநீர் குடித்து இறந்துபோன மூன்று பேருக்கு தலா ஐந்து லட்ச ரூபாய்கள் நிவாரணம் அளிப்பதாக முதல்வர் இதே நேரத்தில் அறிவித்தார்.
இந்த கலப்பட நீரால் மூன்று பேர் இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தவறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ராயசூரின் அனைத்து வார்டுகளிலும் குடி நீரின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளேன். கலப்பட நீர் குழாய் நீருடன் சேர காரணம் என்ன இதில் அதிகாரிகளும் தவறுகள் உள்ளதா என அனைத்து குறித்தும் விசாரணை நடத்தி தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதாகவும் முதல்வர் தெரிவித்தார்.