மீண்டும் நேரலையில் தோன்றும் நித்யானந்தா

புதுடெல்லி: ஜூலை 19
சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக தான் சமாதி நிலையில் இருந்தது பற்றி அவர் பக்தர்களுக்கு விளக்கினார். அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவர் மீண்டும் நேரலையில் தோன்றி பேசியதால் அவரது சீடர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதற்கிடையே சமூக வலைதளங்களில் நித்யானந்தாவின் புகைப்படம் மற்றும் அவர் பேசுவதுபோன்ற ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் பின்னணி இசை ஒலிக்க நித்யானந்தா, மீண்டும் வந்துவிட்டேன்…, மீண்டு வந்துவிட்டேன்… என்ற வசனம் பேசுவது போல உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://www.maalaimalar.com/news/national/tamil-news-nithyananda-live-speech-today-night-8-pm-487854?infinitescroll=1