மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்

மதுரை: ஜூலை. 31 – வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நள்ளிரவில் மழை பெய்தது. நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது வழக்கத்தை விட அதிகமாக வியர்வையின் தாக்கமும் இருந்தது.
இந்த நிலையில் மதியத்துக்குப்பிறகு வாகனம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக கொட்டியது. தென்மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை கொட்டியது.
மதுரையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையில் நகர்முழுவதும் மழை வெள்ளத்தால் தத்தளித்தது. இந்த பலத்த மழைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. அதில் சுவாமி சன்னதி கொடி மரம் பகுதி மற்றும் ஆடி வீதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியது. இதனால் நேற்று இரவு ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் மீனாட்சி அம்மன் வீதி உலா கோவிலுக்குள் நடந்தது.
இந்த நிலையில் ரெயில்வே நிலையம் எதிரே உள்ள மேல பெருமாள் மேஸ்திரி வீதி மாநகராட்சி தெற்கு மண்டலம் எதிர்புரம் மழைக்காக மரத்தடியில் வயதான தம்பதியினர் ஒதுங்கி இருந்தனர்.
திடீரென்று அவர்கள் 2 பேர் இறந்து போனது தெரியவந்தது உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.