மீன்கள் செத்து மிதக்கும் பெங்களூர் மடிவாளா ஏரி

பெங்களூர் : மே. 13 – பெங்களூர் நகரின் மிக பெரிய ஏரிகளில் ஒன்றான மடிவாளா ஏரி நூற்றுகணக்கான பறவைகள் , மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக நகரில் தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்துவரும் நிலையில் இதனால் அழுக்கு தண்ணீர் ஏரியில் கலந்த நிலையில் ஏரியில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்துபோயுள்ளன. பூங்கா நகர் பகுதி என அறிவிக்கப்பட்டுள்ள பி டி எம் லே அவுட் பகுதியில் உள்ள saraasari 272 ஏக்கர் பரப்பளவுள்ள மடிவாளா ஏரியில் அழுக்கு தண்ணீர் கலக்கிறது. ஆனால் மழைக்காலத்தில் அதிகளவில் அழுக்கு தண்ணீர் ஏரிக்கு வந்து சேர்வதால் ஏரியில் உள்ள உயிரினங்கள் அழிந்து வருகின்றன. நகரில் நான்கைந்து நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரியின் சுற்றுப்பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்களிலிருந்து வரும் தண்ணீர் மொத்தமும் ஏரியில் கலக்கிறது. இதனால் மீன்கள் உட்பட பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. கே சி வாலி கால்வாய் பிரிவில் உள்ள மடிவாளா ஏரிக்கு புதிய தண்ணீர் ஊற்ற 40லட்ச லிட்டர் திறன் கொன்ற எஸ் டி பி( நீர் சுத்திகரிக்கும் மையம் ) அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து 20.8 லட்ச சுத்த நீரை இரண்டாம் கட்டத்தில் சேகரித்து 1.99 லட்ச லிட்டர் தண்ணீரை ஏரிக்கு செலுத்தப்படுகிறது. ஆனால் இந்த தண்ணீர் சுத்திகரிப்பு மையம் சரியாக பணியாற்றாததால் ஏரியின் கூற்றுப்பகுதிகளான பிலேகஹல்லி , மடிவாளா , ரூபேண அக்ராஹாரா , உட்பட ஏரியின் சுற்று பகுதியின் கால்வாய்களின் தண்ணீர் ஏரிக்குள் செல்வதால் எஸ் டி பி பிரிவு இருந்தும் எந்த பயனும் இல்லை. மடிவாளா ஏரி பெருமளவில் மூலிகை
மரங்கள் செடிகள், ஆகியவற்றை கொண்டுள்ளது. இங்கு பிலிகான் மற்றும் பால்கன் இன பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் வம்ச விருத்திக்காக வருகின்றன. இத்தகைய ஏரியில் கலப்பட நீர் கலப்பதை தவிர்க்க சம்மந்த பட்ட அதிகாரிகள் நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் ஏன் பி டி எம் லே அவுட்டில் வசிக்கும் நவீன் என்பவர் வற்புறுத்தினார்.