மீன் பெட்டிகளில் சந்தன மர துண்டுகள் கடத்தல்

ஈரோடு: அக்டோபர் 10
ஈரோட்டில் இரவு நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.. சமீபத்தில் குமுளி அருகே தனியார் தோட்டத்தில் வளர்க்கப்பட்ட 3 சந்தன மரங்களை, வெட்டிக் கடத்திய இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்ததும், அவர்களிடமிருந்து சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 89 கிலோ சந்தன கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டதும் நினைவிருக்கலாம்.. அதேபோல ஈரோட்டிலும் ஒரு சம்பவம் நடந்து 2 பேர் சிக்கியிருக்கிறார்கள்.
அவர்களிடம் வனத்துறையினரிடம் விசாரணையை நடத்தி வருகிறார்கள். வனச்சட்டத்தை பொறுத்தவரை, தமிழகத்தில் சந்தன மரங்களை வெட்டுவதற்கும் விற்பதற்கும் யாருக்கும் அனுமதி கிடையாது.. வனத்துறை அதிகாரியின் அனுமதி, அதற்குரிய சான்றிதழ்கள் இருந்தால்தான், வனத்துறையின் அனுமதியுடன் மரம் வெட்டி அரசுக்கு விற்க முடியும்.. சந்தன மரங்களை உங்கள் நிலத்தில் வளர்ப்பதானாலும், அதனை வெட்டி விற்பதானாலும் வனத்துறை அதிகாரியிடம் உரிமம் மற்றும் அனுமதியை பெற வேண்டும். வேண்டும். அந்தவகையில், தமிழகத்தில், சேலம், திருப்பத்தூர், சத்தியமங்கலம் பகுதிகளில் சந்தன மரக்கிடங்குகள் உள்ளன.இங்கு கடத்தல் கும்பலிடம் பறிமுதல் செய்த சந்தன மரங்கள், விவசாயிகளிடம் வளர்த்து வெட்டப்பட்ட மரங்கள், வனங்களில் வெட்டப்பட்ட மரங்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.