மீன் வாங்கும் போது நடந்த தகராறு கொலையில் முடிந்தது

பெங்களூர்: ஜூன்6 – குடி போதையில் அக்கம்பக்கத்தாருக்கிடையில் ஏற்பட்ட சண்டை இளைஞன் ஒருவனின் கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு புலிகேசி நகரின் கே ஹெச் பி காலனியில் நள்ளிரவு நடந்துள்ளது . கே ஹெச் பி காலனியின் பிரஷாந்த் (24 ) என்பவன் கொலையுண்டவன் , இவனை கொலை செய்து விட்டு தலை மறைவாயுள்ள பக்கத்து வீட்டை சேர்ந்த அர்ஜுன் (26) என்பவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.என கிழக்கு பிரிவு டி சி பி டாக்டர் பீமாஷங்கர் குலேத தெரிவித்தார். மது அருந்திக்கொண்டு இரவு வீட்டுக்கு வந்திருந்த பிரஷாந்த் தேவை இல்லாமல் மீன் விற்றுக்கொண்டிருந்த ஒருவனை மிரட்டியுள்ளார். அதே நேரத்தில் மீன் வாங்க வந்திருந்த குற்றவாளி அர்ஜுன் நான் மீன் வாங்க வரும்போது மீன் விற்பவனை மிரட்டுகிறாயா என சண்டை போட்டுள்ளான். இது விஷயமாக இருவருக்குள் சண்டைகள் நடந்துள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அர்ஜுன் வீட்டிலிருந்த கத்தியைக்கொண்டுவந்து பிரஷாந்தின் மார்பு பகுதியில் குத்தியுள்ளான். படு காயமடைந்த பிரஷாந்த் அதிக ரத்த சோகையால் அங்கேயே இறந்து போயுள்ளான். பிரஷாந்த் இறந்துபோன விஷயம் தெரிந்தவுடனேயே குற்றவாளி தப்பியோடிவிட்டுள்ளான். தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த புலிகேசி நகர் போலீசார் பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.