முகேஷ் அம்பானி-க்கு3வது கொலை மிரட்டல்

மும்பை, அக்டோபர் . 31 – இந்தியாவின் பெரும் பணக்காரர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி-க்கு திங்கள்கிழமை கொலை மிரட்டல் விடுத்து ரூ.400 கோடி பணம் கேட்டு மிரட்டி எச்சரிக்கப்பட்டு உள்ளார். இது கடந்த ஒரு வாரத்திற்குள் முகேஷ் அம்பானிக்கு வந்த மூன்றாவது கொலை மிரட்டல்
நவம்பர் 1 ஆம் தேதி மும்பையில் ஜியோ வோல்டு பிளாசா என்னும் இந்தியாவின் ஆடம்பர ஷாப்பிங் மால் திறக்கப்பட உள்ள நிலையில், இதை திறக்க முகேஷ் அம்பானியும் அவரது குடும்பமும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேளையில் ஒரு வாரத்தில் 3 கொலை மிரட்டல் வந்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்திற்கும் மத்திய அரசு நாட்டிலேயே அளிக்கப்படும் அதிகப்படியான பாதுகாப்பு அளிக்கப்படும் வேளையிலும் இந்த கொலை மிரட்டல் அம்பானி குடும்பத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு 2 கொலை மிரட்டல் எச்சரிக்கையை விடுத்தவர் தான் 3வது முறையும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 3 மிரட்டல்களும் ஓரே இமெயில் ஐடியில் இருந்து வந்துள்ளதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளதாக நியூஸ்18 வெளியிட்டு உள்ளது. 3வது முறை அனுப்பப்பட்ட கொலை மிரட்டல் ஈமெயிலில் பணம் தொகை அதிகரித்துள்ளாதாக தகவல் கிடைந்துள்ளது. இந்த இமெயில் ஐடி பெல்ஜியம் நாட்டுக்கு டிரேஸ் செய்யப்பட்டு உள்ளது, கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எச்சரிக்கை இமெயில் தொடர்ந்து முகேஷ் அம்பானி-யின் மும்பை ஆண்டிலியா வீட்டை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானிக்கு வந்த மின்னஞ்சலில், இப்போது அந்தத் தொகை 400 கோடி, என்னைக் டிராக் செய்யவும், கைது செய்யவும் காவல்துறையால் முடியாது. உங்கள் பாதுகாப்பு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எங்களின் ஒரு ஸ்னைப்பர் வீரர்களில் ஒருவர் போது உங்களைக் கொல்ல முடியும் என்று மிரட்டியுள்ளாற்
இதற்கு முன்பு, முகேஷ் அம்பானி-க்கு ரூ.20 கோடி கேட்டு கொலை மிரட்டல் எச்சரிக்கை வந்தது, இந்த ஈமெயில் அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை இரவு 8:51 மணிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மும்பையின் காம்தேவி காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 387 மற்றும் 506 (2) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அக்டோபர் 28 ஆம் தேதி 2வது ஈமெயில் அதே கொலை மிரட்டல் உடன் 200 கோடி ரூபாய் கேட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று 3வதாக ஈமெயில் வந்துள்ளது.