முட்டைகோசுகள் மத்தியில்செம்மரம் கடத்தல் : 5 பேர் கைது

சாமராஜ்நகர் : செப்டம்பர் . 7 – முட்டைகோஸுகள் மத்தியில் செம்மரங்களை வைத்து கடத்திவந்த ஐந்து பேரை சாமராஜ்நகர் – குண்டலுபேட்டை வீதியின் லக்கூற்று அருகில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் இவர்களை கைது செய்துள்ளனர். பெங்களூருவை சேர்ந்த ரவி (47), சாமராஜநாகரின் சரகூறு பகுதியை சேர்ந்த எஸ் எம் கோவிந்தராஜூ (43) , ஆனந்த் (40) , சி எஸ் அன்வர் பாஷா (63) மற்றும் மஹேந்திரா (32 ) ஆகியோர் கைது செய்யதுள்ள குற்றவாளிகள். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் மஹிந்திரா பொலெரோ வாகனத்தில் மேற்புறம் முட்டைகோசுகளை நிரப்பிக்கொண்டு அவற்றின் இடையில் செம்மர துண்டுகளை ஒளித்துவைத்து கடத்துவது குறித்து கிடைத்த நம்பகமான தகவலை வைத்து பண்டீபுரா வனத்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்த கைதுகள் குறித்து குண்டலுபேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதுடன் குற்றவாளிகள் நீதிமன்ற கைதுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பொலேரோ வாகனம் உட்பட 50 கிலோ செம்மர துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதே போல் மற்றொரு விவகாரத்தில் பெல்தங்காடியின் வேனூறு அருகில் பெங்களூர் சி ஐ டி போலீஸ் வனப்பிரிவு குழுவினர் 125 கிலோ எடையுள்ள செம்மர துண்டுகளை கடத்திய பின்னர் அவற்றை வேனூறு வன பிரிவுக்கு இடம் மாற்றியுள்ளனர். பண்ட்யாளா தாலூகாவின் மாவினகட்டீ என்ற பகுதியில் வசித்து வந்த காலித் மற்றும் குருவாயனகெரே பகுதியில் வசித்து வந்த தீக்ஷித் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் என்பதுடன்.பெல்தங்கடி தாலூகாவின் கர்மநெலு என்ற பகுதியிலிருந்து செம்மரம் கடத்தப்படுவதாக கிடைத்த நம்பகமான தகவலை வைத்து சி ஜடி வனப்பிரிவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வாகனம் மற்றும் செம்மரங்களை கைப்பற்றியுள்ளனர்.