முதலமைச்சருக்குகடலில் வாழ்த்து பேனர்

புதுச்சேரி, ஆகஸ்ட் 4- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ரங்கசாமி பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அதுபோல் இந்தாண்டும் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பே முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி புதுவை நகர பகுதி முழுவதும் வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும்வகையில் பல்வேறு நடிகர்களின் தோற்றத்திலும் காமராஜர் மற்றும் மன்னர்கள் வேடத்திலும் பேனர் வைத்துள்ளனர். அதோடு அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வருவது போலும் ரங்கசாமி செய்த சாதனைகளை பட்டியலிட்டும் ஆங்காங்கே பேனர் வைத்துக்கப்பட்டுள்ளன. அதிலும் முதலமைச்சர் ரங்கசாமியை வாழ்த்தி அவரது தொண்டர்கள் நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர். இதனை புதுவை கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வியப்புடன் பார்த்து சென்றனர். மேலும் புதுவையில் முக்கிய சாலை சந்திப்புகளில் முதலமைச்சர் ரங்கசாமியின் சாதனைகளை பெரிய எல்.இ.டி. திரையில் ஒளிபரப்பு செய்தனர்.