முதல்வரிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய எம்எல்ஏக்கள்

பெங்களூர், அக். 6-
கர்நாடக மாநில அமைச்சர்களுக்கு மாநில முதல்வர் இரா போஜன விருந்து அளித்துள்ளார்.
நேற்று வியாழன் இரவு, முதல்வர் சித்ராமையா தலைமையிலான அரசின் அமைச்சர்களுக்கு, முதல்வரின் காவேரி இல்லத்தில் அமைச்சர் சகாக்களுக்கு அவர் விருந்தளித்தார். அப்போது தற்போது அரசியல் நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க் கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இதற்கு அமைச்சர்கள் பதில் அளிக்காமல் இருப்பதாக சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் அமைச்சர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கவே, இந்த ரா போஜன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக முதல்வரின் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ,தான் தங்கி இருந்த வீட்டில் இருந்து, வெளியேறி தற்போது காவேரி இல்லத்திற்கு மாறி இருப்பதால், அதற்கு விருந்து கொடுக்க வேண்டும் என சில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால் தான் இந்த விருந்து ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது. துணை முதல்வர் டி .கே. சிவகுமார் இதில் பங்கேற்றார். சரண் பிரகாஷ் பாட்டில், ஆர்.பி .திமாமாபுரா சந்தோஷ் லார்ட், பைரத்தி சுரேஷ் ,லட்சுமி ஹெப்பல்கர், கே. எச் முனியப்பா, ஜமீர் அகமது கான், டி. சுதாகர் போசராஜ், கே .வெங்கடேஷ் சிவராஜ் தங்கடக்கி எச்.கே. பாட்டில் எஸ் எஸ் மல்லிகர்ஜுனா, ஆகிய அமைச்சர்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டனர் .எம்.பி .பாட்டில், பிரியங் கார்கே, ஜி பரமேஸ்வர், ஆகியோர் விருந்தில் பங்கேற்கவில்லை. மானியங்கள், இடமாற்றம் குறித்து எம்எல்ஏக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.மூன்று துணை முதல்வர்கள் பதவி உருவாக்குவது குறித்து அண்மையில் கே என் ராஜண்ணா எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தினார்.
இது ஒரு புறம் இருக்க, மது கடையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்ப்பதாக பி. ஆர். பாட்டில் எம்எல்ஏ, அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். உத்திரவாத திட்டங்கள் நிறைவேற்ற அரசிடம் பணம் இல்லை என்று சடாக் ஷரி கூறியுள்ளார்.
இது மட்டுமல்லாமல் இந்த அரசில் லிங்காய்த்து அதிகாரிகளுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சாமனூர் சிவசங்கரப்பாவும் கூறியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலைகள் இடையே முதல்வரின் விருந்தோம்பல் சில அமைச்சர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.