முதல்வருக்கு கொரோனா

பெங்களூர்: ஆகஸ்ட். 6 –
கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் . கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள், தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உங்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.எனவும் தெரிவித்துள்ளார் .இதனால் எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டது குறிப்பிடத்தக்கது,
முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று தாக்கியுள்ளது. இந்த நிலையில் இன்று அவர் திட்டமிட்டிருந்த டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11.30 மணிக்கு பெங்களூரிலிருந்து முதல்வர் டெல்லிக்கு செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . ஆனால் கொரோனா காரணத்தால் அவருடைய இரண்டு நாட்கள் டெல்லி விஜயம் ரத்து செய்யப்பட்டு தற்போது அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மையே ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் எனக்கு இன்று கோவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் . என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா சோதனை செய்து கொள்ளுங்கள். என்னுடைய டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது . என தன் டீவீட்டில் முதல்வர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் இது குறித்து தெரிவிக்கையில் கொரோனா தொற்று அறிகுறிகள் தனக்கு தென்பட்டுள்ள நிலையில் கொரோனா சோதனைக்கு உட்படுத்திக்கொண்டேன். அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிலேயே தனிமையில் உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களையும் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும் அதுவரை அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை இரண்டாவது முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது . இந்த நிலையில் இன்று டெல்லிக்கு செல்லவேண்டியிருந்த முதல்வர் அங்கு மாலை நடக்க இருந்த சுதந்திர பவழ விழா நிகழ்ச்சியில் பங்கு கொண்டு இன்று இரவு டெல்லியிலே தங்கி நாளை நித்தி ஆயோக் கூட்டத்தில் பங்கு கொண்டு நாளை இரவு பெங்களூருக்கு திரும்புவதாக இருந்தது. அதே வேளையில் டெல்லியில் கட்சி மேலிட தலைவர்களையும் முதல்வர் சந்திப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. இப்போது இவை அனைத்தும் ரத்தாகி உள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று முழுக்க ஓய்வின்றி பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். லால்பாக்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவராஜ்குமார் , ராகவேந்திரா ராஜ்குமார் , பல அமைச்சர்கள் , மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சித்ரகலா பரிஷத்தில் ஜவுளி தின விழாவில் பங்கு கொண்ட முதல்வர் , அதன் பின்னர் வீட்டு அலுவலகம் கிருஷ்ணாவில் தேசிய பி ஜே பியின் வீட்டு வீட்டிற்கும் மூவர்ண கொடி வீடியோ கண்காட்சியிலும் பங்கு கொண்டு பின்னர் பல தொழில்களை துவக்க அனுமதி அளிக்கும் மாநிலத்தின் உயர் மட்ட ஒப்புதல் குழு கூட்டத்திலும் பங்கு கொண்டதை தொடர்ந்து மாநில அளவிலான முதல் திஷா சமிதி கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் மாலை ஞானபாரதி வளாகத்தில் நடந்த சென்டர் பார் எக்ஸலன்ஸ் கட்டிட பூமி பூஜையில் கலந்து கொண்டார். கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள முதல்வருடன் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட பல அமைச்சர்கள் , எம் எல் ஏக்கள் , தொலைபேசியில் பேசி நலம் விசாரித்ததுடன் விரைவில் குணமடையும்படி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பொம்மைக்கு கொரோனா தொற்று பாதித்துள்ள செய்தி தெரிய வந்த உடனேயே இன்று காலை முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரப்பா தொலைபேசியில் அழைத்து அவரிடம் நலன் விசாரித்தார். அதே போல் அமைச்சர்கள் வி சோமண்ணா , ஆர். அஷோக் , டாக்டர் கே சுதாகர் , டாக்டர் அஸ்வத்தநாராயணா ,கே கோபாலய்யா , ஹாலப்பா ஆச்சார் , பிரபு சவுஹான் , பி சி நாகேஷ் , உட்பட பல அமைச்சர்கள் முதல்வரிடம் நலன் விசாரித்தனர் மற்றும் விரைவில் அவர் குணமடைய வாழ்த்தினர். கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள உதல்வர் பசவராஜ் பொம்மை ஆர் டி நகரில் உள்ள தன் வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திகொண்டு ஓய்வு பெற்று வருகிறார்.