முதல்வருக்கு வைக்கப்பட்ட குறி குண்டுவெடிப்பில் பரபரப்பு தகவல்

பெங்களூர் நவம்பர் 22
மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது இது முதல்வர் பசுவராஜ் பொம்மைக்கு குறி வைக்கப்பட்ட குண்டு என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மங்களூர் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது அதேசமயம் கர்நாடகத்தில் யாரை குறிவைத்து இந்த வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டதில் அதிர்ச்சி தகவல் வெளியாக்கி உள்ளது அதாவது முதல்வர் பசுவராஜ் பொம்மையை குறிவைத்து இந்த குண்டு தயாரிக்கப்பட்டதாக முதல் பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது