
பெங்களூர், நவ.3-
ஐந்து ஆண்டுகளுக்கு நானே முதலமைச்சர் என்று முதல்வர் சித்தராமையா கூறிய கருத்து காங்கிரஸில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது இதனால் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் துணை முதல்வரின் பதில் மர்மமாக உள்ளது
முதல்வராக 6 மாதங்களே நிறைவடைந்துள்ள சித்தராமையா, அடுத்த 5 ஆண்டுகளுக்கு நானே முதல்வராக இருப்பேன் என்று திடீர் என கூறியதன் காரணம் என்ன என்றும், இதன் உள்நோக்கம் என்ன என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.நேற்று ஹோஸ்பேட்டையில் முதல்வர் சித்தராமையா அடுத்த 5 ஆண்டுகளுக்கு நானே முதல்வராக இருப்பேன் என்று பேசினார். வேலை இல்லாதவர்கள் தான் முதல்வர் மாற்றம் என்று பேசி வருகின்றனர் என்றும் அவர் காட்டமாக கூறினார். முதலமைச்சரின் கருத்துக்கு பல்வேறு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக முதலமைச்சர் பதவியை டி கே சிவகுமார் ஏற்பார் என்று பேசப்பட்டு வந்த நிலையில் முதல்வரின் கருத்து தற்போது காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துணை முதல்வர் டி.கே சிவக்குமார்,இதைப் பற்றி நான் பேசவில்லை. நான் ஹை கமாண்ட் சொல்வதை மட்டுமே கேட்கிறேன் என்று கூறிய மர்மமான கருத்தும் விவாதத்தை கிளப்பியது.
ஹைகமாண்ட் உத்தரவுக்குப் பிறகும், முதல்வர் பதவி தொடர்பான காங்கிரஸ் எம்எல்ஏக்களின் அறிக்கைகள் தொடர்ந்தன, மைசூரில் முதல்வர் பிரியங்க் கார்கே கூறியது அவரது தனிப்பட்ட அறிக்கை. யாரை முதலமைச்சராக்க வேண்டும், யாரை நீடிக்க வேண்டும் என்பதை ஹை கமாண்ட் முடிவு செய்கிறது. டெல்லியில் அதிகாரப் பகிர்வு குறித்து 4 பேர் அமர்ந்து பேசினர். இந்த விவகாரத்தில் அவர்களுக்கு மட்டுமே தெளிவு உள்ளது. முதலமைச்சரின் கருத்து தனிப்பட்ட கருத்து. மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை காங்கிரசில் கருத்து சுதந்திரம் உள்ளது. இதில் தவறில்லை. ஆனால், அனைத்தையும் கட்சி மேலிடமே முடிவு செய்யும் என்று சித்தராமையாவின் வார்த்தைகளுக்கு அவர் கடுமையாக பதிலளித்தார்.
ராமநகரா எம்எல்ஏ இக்பால் உசேன், சித்தராமையாவின் கருத்துக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் முதல்வராக வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம் என்றார்.முதல்வர் சித்தராமையாவின் கருத்துக்கு காங்கிரசில் பலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், வரும் நாட்களில் முதல்வர் பதவிக்கான போர் தீவிரமடையும் என்பதை மறுக்க முடியாது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் கே.சி. வேணுகோபால், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அமர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடத்தி, அதிகாரப் பகிர்வு முதல், கட்சியின் எந்தப் பிரச்னையையும் யாரும் வெளிப்படையாகப் பேச வேண்டாம் என்று கூறியும், அதிகாரப் பகிர்வு பற்றிக் கைவிரல் விடாமல் தொடர்ந்து பேசி வந்தார்.
சீனியர்கள் எச்சரித்ததையடுத்து மீண்டும் முதல்வர் மாற்றம் குறித்து விவாதம் நடந்து வருவது காங்கிரஸ் மேலிடத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.மேலும், மேலிடம் என்ன செய்தியை அனுப்பப்போகிறது என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பதவி நாற்காலி மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது காங்கிரஸில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது