
மைசூர் : அக்டோபர் 11 – முதல்வர் வீட்டின் மீது கல்வீசி விட்டு தப்பியோடியிருந்தவனை துரத்தி பிடித்த போலீசார் அவனுக்கு எதிராக இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 427, 353, மற்றும் 504ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளி முதல்வர் வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திவிட்டு மைசூர் புறப்பகுதியில் தலைமறைவாயிருந்துள்ளான் . நேற்று காலை 8 மணியளவில் நபர் ஒருவர் மைசூரின் டி கே லே அவுட்டில் உள்ள முதல்வரின் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியிருந்தான் . உடனே செயலில் இறங்கிய போலீசார் சிலவே மணிநேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இந்த கல்வீச்சில் ஈடுபட்டவன் மைசூருவை சேர்ந்த சத்யமூர்த்தி என தெரியவந்துள்ளது. இவனுக்கு எதிராக போலீசார் தற்போது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். மைசூரின் சரஸ்வதி புரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருப்பதுடன் நேற்றே முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்து குற்றவாளியை மூன்றாவது ஜெ எம் எப் சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். பின்னர் குற்றவாளி சத்தியமூர்த்தியை நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்துள்ளனர் . முதல்வர் வீடு மீது கல் எரிந்ததை தீவிரமாக கருதிய சரஸ்வதிபுரம் போலீசார் இன்ஸ்பெக்டர் ரவீந்திரா தலைமையில் நடவடிக்கை மேற்கொண்டு சிலவே மணிநேரங்களில் குற்றவாளி குறித்த அடையாளங்களை கண்டுபிடித்து அவனை கைது செய்ய சென்றபோது அவன் பொலிஸாரையும் தாக்க முயற்சித்துள்ளான் . ஆனாலும் போலீசார் அவனை கைது செய்வதில் வெற்றியடைந்துள்ளனர்.