முதல்வர் தகவல்

பெங்களூர், ஜூன் 13-
கர்நாடக மாநிலத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு செய்துள்ளார்.
பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் பிரதமரின் ஆவாஸ் இத்திட்டத்தின் கீழ்1,588 வீடுகள் கட்டுமான பணிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில்கர்நாடக மாநிலத்தின் நகரப்பகுதிகளில் எங்கள் அரசு, சார்பில் வீடற்ற ஏழைகளுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.
இத்திட்டத்தில் இதுவரை 52 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள வீடுகளை இந்த ஆண்டுக்குள் கட்டித்தரப்படும்.
என்று அவர் அறிவித்தார்