முதல்வர் பதவி விலக காங். தர்ணா

புதுடெல்லி , ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்பு புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறது நாடாளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மற்றும் மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) அடங்கிய தேர்தல் குழு (எலக்ட்ரோல் காலேஜ்), ஜனாதிபதியை தேர்வு செய்கிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பானது நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.