முதல்வர் மீது எப்ஐஆர் காங்கிரஸ் வலியுறுத்தல்

பெங்களூர்,நவ.19- பெங்களூருவில் வாக்காளர் தகவல் திருட்டு வழக்கின் முக்கிய கிங்பின் முதல்வர் பசவராஜ் பொம்மை என்று காங்கிரஸ் கட்சி இன்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
வாக்காளர் தகவல் திருட்டு வழக்கில் நியாயமான விசாரணைக்காக அவர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என மாநில பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, கேபிசிசி தலைவர் டி.கே. சிவக்குமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: வாக்காளர் தகவல் திருட்டு மோசடி பசவராஜ பொம்மை தான் உண்மையான மன்னன் என்பதை நிரூபித்துள்ளது. முதலமைச்சர் என்ற முறையில் வழமை போன்று பொய் சொல்லி உண்மையை மறைக்க முற்பட்டுள்ளார் என்றார்