முதல்வர் மீது போலீசில் புகார்

பெங்களூர் நவ.17-
கர்நாடக மாநிலத்தில் வாக்காளர்களின் விபரங்களை தனியார் நிறுவனம் மூலம் திருடி பெரும் மோசடி நடந்து இருப்பதாக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர். இதற்கு காரணமான முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் கொடுத்தனர். சித்ரா மையா டி கே சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தனர் தனியார் நிறுவனம் மூலம் வாக்காளர்களின் விபரங்களை சேகரித்து அதை பிஜேபி கட்சிக்கு சாதகமாக மோசடி செய்திருப்பதாக இந்த மனுவில் கூறியுள்ளனர்
வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை தனியார் நிறுவனம் வாயிலாக திருடும் செயலில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது என தீவிர குற்றச்சாட்டை சுமத்தியுள்ள மாநில காங்கிரஸ் இந்த விஷயமாக முதல்வர் பசவராஜ் பொம்மை ராஜினாமாவையும் வற்புறுத்தியுள்ளது. பெங்களூரின் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டு பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரணதீப் சிங்க் சுர்ஜீவாலா , மாநில எதிர் கட்சி தலைவர் சித்தராமையா , மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் , பி கே ஹரிப்ரசாத் ஆகியோர் கூறுகையில் வாக்காளர்களின் தகவல்களை தனியார் நிறுவனம் வாயிலாக திருடும் செயலில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இதன் வாயிலாக தேர்தல் மோசடிகளில் ஈடு பட முதல்வர் பசவராஜ் பொம்மை ஈடுபட்டுள்ளார் என இவர்கள் அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளனர் . வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை திருட முயற்சிகள் மேற்கொண்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை உடனே ராஜினாமா அளிக்க வேண்டும் மற்றும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் வற்புறுத்தியுள்ளார். 40 சதவிகித கமிசன் அரசு தேர்தல் நடைமுறைகளையே மோசடி செய்ய புறப்பட்டுள்ளது . முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட சில அதிகாரிகள் மற்றும் மற்றும் பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் இந்த வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசடிகளில் பங்கு பெற்றுள்ளனர் எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். வாக்காளர்கள் பட்டியலை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கு மாநகராட்சி அளித்த உத்தரவை துஷ்ப்ரயோகம் செய்து செலுமே என்ற தனியார் சுய சேவை சங்கதித்திடம் ஒப்படைக்கப்பட்டது . இந்த செலுவே நிறுவனம் தன்னுடைய நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகளுக்கு போலி அடையாள அட்டைகளை வழங்கி வாக்காளர்களிடமிருந்து தகவல்களை சேகரித்துள்ளது. தங்கள் ஏஜெண்டுகளை அரசு அதிகாரிகள் போல் காட்டி ரகசியமாக வாக்காளர்களின் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களை அபகரித்துள்ளது என்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக பயங்கர குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர் . பி ஜே பி ஆட்சியில் அனைத்து விஷயத்திலும் ஊழல்கள் நடந்துள்ளது. தேர்தல் உரிமையை திருடும் முயற்சிகளும் நடந்துள்ளது. வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் மோசடிகள் இது வரை நடந்ததில்லை. செலுமே நிறுவனம் டிஜிட்டல் சமீக்ஷா என்ற மொபைல் செயலியை வைத்துள்ளது. மொத்தத்தில் வாக்காளர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடுவது குற்றம் என காங்கிரஸ் பிரமுகர்கள் அரசுக்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளனர்.