முதல்வர் லண்டன் பயணம் ரத்து

பெங்களூர்: மே. 14 – முதல்வர் பசவராஜ் பொம்மை தன்னுடைய லண்டன் பயணத்தை கடைசி நேரத்தில் ரதது செய்துள்ளார். இம்மாதம் 21 அன்று முதல்வரின் வெளிநாட்டு பயணமாக அவர் லண்டனுக்கு செல்லவேண்டியிருந்தது. ஆனால் தாவோஸ் நாட்டில் உள்ள உலக பொருளாதார மைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். பெரிய மற்றும் இடைநிலை தொழில் துறை அமைச்சர் முருகேஷ் நிராணி , அரசின் தலைமை செய்யலர் பி ரவி குமார் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் தாவோவிற்கு செல்ல உள்ளனர். முதல்வரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லண்டன் பயணம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. லண்டனுக்கு முதல்வர் விஜயம் செய்யும் நேரத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்த்தின் எதிரில் அமைக்கப்பட்டுள்ள பகவான் பசவேஸ்வரர் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் நடக்க உள்ள கன்னட மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்தார். 1983ல் மறைந்த முன்னாள் மாநில முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே மாநிலத்தின் முதல்வராயிருந்த போது லண்டனுக்கு அதிகாரபூர்வ விஜயம் செய்திருந்தார். பின்னர் மாநிலத்தை ஆண்ட எந்த முதல்வரும் லண்டனுக்கு சென்றிருக்கவில்லை. 40 ஆண்டுகள் கழிந்த பின்னர் மாநிலத்தின் முதல்வர் லண்டனுக்கு செல்ல விருப்பது பெருமை என நினைத்து கொண்டிருந்த நிலையில் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதால் பிரிட்டிஷ் மண்ணில் வாழும் கன்னடிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.