முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை : மார்ச் 1
திமுக தலைவரும் , தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்; நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்,’என்றார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து : 70வது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜகத் தலைவர் அண்ணாமலை : தமிழக முதல்வர் திரு @mkstalinஅவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் : இன்று 70-ஆம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன்மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் : தல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழ்நாட்டை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர், தளபதி திரு @mkstalin
அவர்கள் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.தெலங்கானா ஆளுநர் தமிழிசை : மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்…