முதல்வர் ஸ்டாலின் குணமடைய ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், உடற்சோர்வு சற்று இருந்ததை அடுத்து, பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, “தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முக கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு பாதுகாப்பாய் இருப்போம்” என பதிவிட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து வருத்தமடைந்தேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.maalaimalar.com/news/state/tamil-news-aiadmk-mlas-meeting-on-17th-in-chennai-485286?infinitescroll=1