முதல் ஆண்டு பியூசி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு

பெங்களூரு ஜூன் 11: – முதலாண்டு பி யு மாணவர்களுக்கு ஆன் லைனில் தேர்வுகள் நடத்துமாறு அனைத்து கல்லூரிகளுக்கும் பி யு தேர்வு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதற்கு முன்னர் முதல் ஆண்டு பி யு மாணவர்கள் அனைவரும் தேர்வாகியுள்ளதாக அறிவிக்க இருப்பதாக கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஆன் லைன் வாயிலாக தேர்வுகள் நடக்க இருப்பதாக அறிவித்து மாணவர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளார். பி யு தேர்வுகள் ஆணையம் இரண்டு மாதிரியான வினாத்தாள்களை தயாரித்திருப்பதுடன் வெப் சைட்டுகளில் மாதரி வினா தாள்கள் பதிவேற்றப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த கேள்வி தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் கேள்விகளுக்கு பதில் எழுதி வாட்ஸ் அப் , இ -மெயில் அல்லது தபாலில் அனுப்பவேண்டும். மாணவர்கள் பேராசிரியர்களுக்கு தங்கள் பதில் தாள்களை அனுப்ப வேண்டும். பின்னர் பேராசிரியர்கள் இதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும். பின்னர் பேராசிரியர்கள் மாணவர்களின் தனிப்பட்ட கல்வி திறனை கருத்தில் கொண்டு மதிப்பெண்கல் மற்றும் முடிவுகளை அப் லோட் செய்யவேண்டும். அசைன்மென்ட் கணக்கில் தேர்வுகள் நடத்த பி யு வாரியம் முடிவு செய்துள்ளதால் முதலில் மாணவர்கள் தங்கள் அசைன்மெண்டுகளை அனுப்பிவைக்க இம்மாதம் அதாவது ஜூன் 20 இறுதி நாளாக அறிவித்திருப்பதுடன் , பேராசிரியர்கள் ஜூன் 25 க்குள் மதிப்பீடுகள் வழங்க வேண்டும் இதில் இரண்டாவது அசைன்மென்ட் ஜூன் 26 அன்று துவங்கி ஜூலை ஐந்தாம் தேதி வரை நடக்க வேண்டும். பேராசிரியர்கள் ஜூலை 10 க்குள் மதிப்பெண்கள் அளித்து இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களை பரிசீலித்து ஜூலை 15 க்குள் இந்த நடவடிக்கைகளை முடித்து முடிவுகளை ஜூலை 20 க்குள் சியட்ஸ் போர்ட்டறில் அப் லோட் செய்யவேண்டும் என மாநில பி யு வாரியம் அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது