முதல் சுற்றிலேயே செரீனா வீனஸ் இணை தோல்வி

நியூயார்க், செப்.2-
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.இதில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில் செரீனா – வீனஸ் வில்லியம்ஸ் இணை ,செக் குடியரசின் லூசி -லிண்டா இணையை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-6,6-4 என்ற நேர் செட்டில் வில்லியம்ஸ் சகோதிரிகள் தோல்வி அடைந்தனர்
.2018 பிரெஞ்சு ஓபன் தொடருக்கு பிறகு முதல் முறையாக இனைந்து விளையாடிய செரீனா – வீனஸ் வில்லியம்ஸ் இணை முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது.