முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி

சில்ஹெட், மார்ச் 26- வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 328 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இலங்கை அணி. வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 511 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணியானது,
3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 13 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது. நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 49.2 ஓவர்களில் 182ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக மொமினுல் ஹக் 87, மெஹிதிஹசன் மிராஸ் 33 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் கசன் ரஜிதா 5, விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்களை வீழ்த்தினர். 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.