முதல் முறையாக 2வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா

துபாய், செப். 21- பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதல் முறையாக 2-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மந்தனா 111 ரன்கள் எடுத்ததால் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்தியாவின் ஷபாலி வர்மா 6-ம் இடத்தில் உள்ளார். ஒருநாள் தரவரிசையில் மந்தனா 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டி20 தரவரிசையில் பந்துவீச்சில் இந்தியாவின் தீப்தி வர்மா 7-வது இடத்தில் உள்ளார்.
இதேபோல, ஆல்-ரவுண்டருக்கான பட்டியலில் இந்திய அணியின் தீப்தி வர்மா 3-வது இடத்தில் நீடிக்கிறார்.