முதல் முறையாக 6வது இடத்துக்கு முன்னேறினார் லக்சயா சென்

புதுடெல்லி, நவ. 9- உலக பேட்மிண்டன் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் (21), முதல் முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் சிறப்பான பார்மில் இருக்கும் லக்சயா 25 போட்டிகளில் 76,424 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி ஒரு இடம் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்துள்ளனர். இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடம்பிடித்துள்ளார்.