முதியவரை ஹனிடிராப்பில் சிக்க வைத்த மூவர் கைது

பெங்களூரு, ஆக. 16: ஹனி ட்ராப் மூலம் 60 வயது முதியவரிடம் ரூ.82 லட்சம் பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அன்னம்மா (40), சினேகா (25), மற்றும் லோகேஷ் (32) அடையாளம் காணப்பட்டனர். அன்னம்மா மடிகேரியைச் சேர்ந்தவர், மற்ற இருவரும் பெங்களூரு பொம்மனஹள்ளியைச் சேர்ந்தவர்கள்.பாதிக்கப்பட்டவர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பனசங்கரியில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். தோழி ஒருவரால் அறிமுகமான அன்னம்மா, தன் மகனின் புற்றுநோய் சிகிச்சைக்காக ராஜேஷிடம் நிதி உதவியை நாடினார். மே மாத இறுதியில் ராஜேஷ் ரூ. 5,000 வழங்கினார். இருப்பினும், அன்னம்மா தனது பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வதிலும், பணம் பெற்றுக்கொள்வதிலும் விடாப்பிடியாக இருந்தார். மே மாதம், எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகிலுள்ள ஓயோ ஹோட்டலுக்கு ராஜேஷை அன்னம்மா அழைத்துள்ளார்.
அந்த சந்திப்பில், அன்னம்மா தன்னை ஹோட்டலில் நெருக்கமான நடவடிக்கைகளுக்கு வற்புறுத்தியதாக ராஜேஷ் தெரிவித்தார். ஜூன் மாதத்தில், அன்னம்மாவும் ராஜேஷும் ஹோட்டலில் 2 முறை சந்தித்து நெருக்க‌த்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் அந்தரங்க தருணங்களை அன்னம்மா பதிவு செய்துள்ளார். இதையடுத்து அன்னம்மா ராஜேஷிடம், சினேகா எனபவரை தனது தோழி என்று அறிமுகப்படுத்தி உள்ளார். சினேகா ராஜுவைத் தொடர்புகொண்டு, தன் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டு, அவரிடமிருந்து பணம் பறிக்க‌ ஆரம்பித்துள்ளார்.
ராஜேஷ் பணத்தை வழங்குவதை நிறுத்தியபோது, சினேகா அவர்கள் தனிப்பட்ட சந்திப்புகளின் வீடியோக்கள் மற்றும் படங்களை அவரது தொடர்புகளுக்கு அம்பலப்படுத்துவதாக மிரட்டினார். பின்விளைவுகளுக்கு பயந்த ராஜேஷ், தனது ஓய்வூதியத் தொகையை சினேகாவிடம் கொடுத்துள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து ராஜேஷிடம் பணத்தை கேட்டு வற்புறுத்தி உள்ளார். இதனையடுத்து, ஜெயநகர் காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்தார். புகாரை அடுத்து, அன்னம்மா, சினேகா, அவர்களுக்கு உதவியதற்காக லோகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி கூறும்போது, இந்த நாள் ஆப்கானியர்களுக்கு மரியாதையும் பெருமையும் நிறைந்தது. ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது. ஆப்கானியர்கள் தங்கள் நாடு, சுதந்திரம், அரசாங்கம் மற்றும் விருப்பத்தை மீண்டும் பெற முடிந்தது என்றார்.