முதியவர் என்பதற்காக தண்டனை சலுகை கிடையாது

மதுரை:நவ. 5- பரமக்குடியை சேர்ந்த இந்திரா தன்னுடைய கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துபவதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.. அந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து கணவரை குற்றமற்றவர் எனக்கூறி விடுதலை செய்தது.. உடனே இந்திரா மதுரை ஹைகோர்ட்டுக்கு அப்பீலுக்கு சென்றார்.. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் பெற்று வருகிறது. குற்றவாளி முதியவர் என்பதற்காக மட்டும் தண்டனையில் சலுகை கோருவதை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் இந்திரா.. இவர் தன்னுடைய கணவர் தனசீலன் உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துவதாக கூறி, கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தண்டனையை உறுதி செய்யுங்கள் அந்த மனுவில், “தனசீலன் தன்னுடைய மருமகளுடன் தவறான உறவு வைத்திருக்கிறார்.. அதை தட்டி கேட்டதால் என்னை தாக்கி, உணவு வழங்காமல், முறையாக பராமரிக்காமல், மத வழிபாடு செய்ய அனுமதிக்காமல் தனிமைப்படுத்திவிட்டார்” என்றெல்லாம் புகார் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், தனசீலனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்தது. இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து தனசீலன் பரமக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் அப்பீலுக்கு போனார்.. அவரது மேல்முறையிட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் நேரடி சாட்சிகள் இல்லை என்று சொல்லி தனசீலனை குற்றமற்றவர் என்று விடுவித்தது.முதியவர் என்பதற்காக சலுகை இல்லை எனவே, இந்த வழக்கில் குற்றவாளியை விடுதலை செய்த முதல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்ப்பினை ரத்து செய்வதுடன், மனுதாரரின் கணவர் குற்றவாளி என்றும் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே ஏற்கனவே கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டபடி 6 மாதங்கள் சிறை தண்டனையும், 5000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும். குற்றவாளி இப்போது 85 வயதை கடந்து விட்டார் என்பதை நீதிமன்றம் உணர்கிறது. இருந்தாலும், வயதின் காரணத்தால் மட்டும் குற்ற பொறுப்பிலிருந்து விடுபட்டு விட முடியாது. அவரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்கள் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் மன உளைச்சலையும், அவமதிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன. சிறையில் அடைக்க உத்தரவு. குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மாற்றவும், குறைக்கவும் தேவையில்லை… குற்றவாளியை கைது செய்து மீதமுள்ள தண்டனையை அனுபவிக்கும் வகையில் சிறையில் அடைக்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.