முதியவர் பலி

பெங்களூர் : நவம்பர். 30 – ஸ்கூட்டரிலிருந்து நிலை தடுமாறி வீதியில் விழுந்த முதியவர் மீது கே எஸ் ஆர் டி சி பஸ் ஏறியதில் படுகாயங்களுடன் அவர் இறந்துள்ள சம்பவம் மைசூர் சந்தன தொழிசாலை அருகில் நடந்துள்ளது. இந்த விபத்தில் இறந்தவர் சித்தநஞ்சப்பா (68) என அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 21 அன்று மாலை 6 மணியளவில் மைசூர் சந்தன தொழிற்சாலை அருகில் சென்றுகொண்டிருந்த சித்தநஞ்சப்பா நிலை தடுமாறி வீதியில் விழுந்துள்ளார். அப்போது பின்னாலிருந்து வந்த கே எஸ் ஆர் டி சி பஸ் இவர் மீது ஏறியதில் பலத்த காயமடைந்த இவரை உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்துபோயுள்ளார். மல்லேஸ்வரம் போக்குவரத்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்து நடந்த இடத்தின் அருகில் உள்ள சி சி டி வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.