முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு ட்விட்டரில் அனுமதி கிடைக்குமா?

நியூயார்க், நவ. 19-
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் கருத்து தெரிவிக்க அனுமதி கிடைக்குமா என்பதை குறித்து ஓட்டெடுப்பு நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் இருக்கும்போது அதிரடி கருத்துக்களை வெளியிட்டு வந்தார். டுவிட்டர் மூலம் தனது கருத்துக்களை அவர் அடிக்கடி வெளிப்படுத்துவார். தேர்தலில் தோற்ற பிறகு அவர் ஆதரவாளர்கள் அமெரிக்க தலைநகரில் வன்முறையில் இறங்கினார்கள். அதனை ஆதரித்தார் இதன் காரணமாக ட்விட்டர் பக்கத்தில் அவரது கணக்கு நீக்கப்பட்டது .
தற்போது ட்விட்டர் ப எலான் மஸ்க் வசம் வந்துள்ளது .அவர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர் ஆவார் எனவே மீண்டும் டொனால்ட் ட்ரம்புக்கு ட்விட்டரில் கணக்கு வழங்கப்படுமா என்பதற்காக ஒரு ஓட்டு எடுப்பை தொடங்கியுள்ளார். இதுவரை 40 லட்சம் பேர் ஓட்டு போட்டுள்ளனர். நாளை வரை இந்த ஓட்டு எடுப்பு நடைபெறுகிறது. ஓட்டெடுப்பு முடிவில் அவருக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தால் மீண்டும் கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.