முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் காவல் நீட்டிப்பு

இஸ்லாமாபாத், செப். 27 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தூதரகம் அனுப்பிய ரகசிய தகவலை அமெரிக்காவுக்கு அனுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கிடையே தோஷகானா வழக்கில் கடந்த மாதம் (ஆகஸ்டு) மாதம் 5-ந் தேதி இம்ரான்கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம் இந்த அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறிய வழக்கில் இவரை விசாரணை செய்வதற்காக இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக இந்த 14 நாள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்) மாதம் 10-ந் தேதி வரை அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார்.