முன்னாள் மந்திரி வீட்டில் திருடிய ஆசாமி கைது

பெங்களூர், ஆக.1-

பெங்களூர், ஆக.1- முன்னாள் உள்துறை அமைச்சர் எம் பி பாட்டில் வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி நோட்டுகள், மற்றும் விலையுயர்ந்த கடிகாரங்கள் திருடி கொண்டு தலை மறைவாக இருந்த வீட்டு வேலைக்காரனை சதாசிவா நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜெயந்த் தாஸ் என்பவர், 5 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் எம். பி. பாட்டில் வீட்டில் வேலை செய்து வந்தார்.  வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வெளிநாட்டு பணம் மற்றும் விலை உயர்ந்த கடிகாரங்களை திருடிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.  இது குறித்து சதாசிவம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது  இது குறித்து டிசிபி சீனிவாஸ் கவுடா   கூறுகையில் முன்னாள் அமைச்சர் எம். பி. பாட்டில் வீட்டில் துணி துவைத்து, ஐரன் போடும் லாண்டரி வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்தவர் ஜெயந்த் தாஸ். இவர் முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினரிடம் நம்பிக்கை குரியவராக இருந்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கடந்த மாதம், 85 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி, மற்றும் பல லட்சம் மதிப்பிலான ஆறு பிராண்டட் வாட்ச்கள் ஆகியவற்றை திருடிக் கொண்டு ஜெயந்தாஸ் ஒரிசாவுக்கு சென்று விட்டார். இதனால் எம்பி பாட்டில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இதன் பேரில் எஃப். ஐ ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.ஒடிசாவில்  அவரை போலீசார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.