முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போட நடவடிக்கை

புதுடெல்லி, ஜூன் 6- 2 மாதங்களில் வீடு தேடிச்சென்று 60 வயதான 4.73 கோடி பேருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக 18 வயதானவர்களுக்கு முன்னெச்சரிக்கை ‘டோஸ்’ என்ற பெயரில் பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசியானது ஏப்ரல் 10-ந் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது. நமது நாட்டில் 13.75 கோடி மூத்த குடிமக்கள் உள்ளனர். இவர்களில் 11.91 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ெலுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது கடந்த 3-ந் தேதி நிலவரம் ஆகும்.
இவர்களில் முன்னெச்சரிக்கை ‘டோஸ்’ என்னும் பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் இருப்பவர்கள் 6.67 கோடி பேர் ஆவர்.
இது கடந்த ஜூலை 31 நிலவரம். இவர்களில் 1.94 கோடி பேர் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர். எனவே எஞ்சிய 4.73 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டியதிருக்கிறது. இது தவிர, 1.04 கோடி மூத்த குடிமக்கள் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசியே போட்டுக்கொள்ளவில்லை. Also Read – கடலூரில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் 27 மாநிலங்களில், 60 வயதானவர்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை, தேசிய சராசரியான 42 சதவீதத்தைக் காட்டிலும் குறைவு ஆகும். நாகலாந்தில் இது 13 சதவீதம், மேகாலயாவில் 15 சதவீதம், அருணாசலபிரதேசத்தில் 16 சதவீதம், மணிப்பூரில் 19 சதவீதம், ஜார்கண்டில் 27 சதவீதம், பஞ்சாபில் 24 சதவீதம், மராட்டியம் 31 சதவீதம், மத்திய பிரதேசம் 31 சதவீதம், அசாம் 29 சதவீதம் ஆகும். இந்த நிலையில் வீடு தேடிச்சென்று தடுப்பூசி செலுத்துகிற ‘ஹர் கர் தஸ்தக் ‘ திட்டத்தின் 2-ம் கட்டம், இந்த ஜூன், ஜூலை மாதங்களில் செயல்படுத்தப்படுகிறது. வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் திட்டத்தின் 2-வது கட்டத்தில், 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய அனைவருக்கும் மற்றும் 60 வயதான தகுதி வாய்ந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு கவனம் செலுத்த வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குறிப்பாக வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடுகிறபோது, 60 வயதான 4.73 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் போட மத்திய அரசு இலக்கு வைத்து, அதில் கவனம் செலுத்துமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 12-18 வயது பிரிவினருக்கு பள்ளிகள் அடிப்படையில் தடுப்பூசி போடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது